20.4.1991………….
ஐந்து தையல்.
கீழ் இமைக்குக் கீழே ஒரு புருவம் முளைத்திருந்தது.
"தேவையாடா
உனக்கு இது?"
"என்
தலைவர் படத்த பத்தி தப்பா
பேசுனா சும்மா விடுவனா.ரெண்டு
போட்டன்."
"உனக்கும்
நல்லா போட்டுத்தான் அனுப்பியிருக்காங்க.அடி வாங்கியும் பேச்சுக்கு
ஒண்ணும் குறைச்சல் இல்ல "
"அடிச்ச
அப்புறம் தான் தெரிஞ்சுது அந்த
தியேட்டர் வாசல் ஆட்டோ ஸ்டாண்டு
மொத்தமா அவன் பசங்க"
"அம்மா
அப்பா இருக்கோமே.எங்களப் பத்தி அக்கறையே
இல்லையா உனக்கு?"
"எங்க
தலைவர் சொல்லிருக்காரு பெத்தவங்கள மதிக்கணும்.அதான் ஆட்டோ ஓட்டி
உனக்கும் அப்பாவுக்கும் மாசாமாசம் 700 ரூவா குடுக்குறன்ல."
"அதுல
நீயே 300 ரூபாய மன்றம்,படத்துக்குனு
வாங்கிகுறியே"
"தலைவர
விட உங்க ரெண்டு பேருக்கு 100 ரூவா அதிகம் செலவு
பண்றன் .சந்தோஷப்படு."
"நீயும்
உன் தலைவனும்.அவனா சோறு போடப்போறான்"
"யம்மா
தலைவர பத்தி பேசாத.கெட்ட
கோவம் வரும்."
வீட்டுக்குள்
ஒலித்த குரல்கள், வீதியில் சென்ற வாத்தியார் காதில்
விழுந்தது.
"அறியாமையும்
சரியான படிப்பறிவும் இல்லாதது தான் இப்படி சினிமாப்
பித்து பிடிச்சு திரிய காரணம்".
தன் நண்பரிடம் கூறி வருந்தினார்.
"அவன்
நடிக்கிறான் சம்பாதிக்கிறான்.இந்த கிறுக்குப் பயலுக
மன்றம்,அது இதுனு இவங்களுக்குள்ள
அடிச்சுக்குறாங்க.சே"
நண்பரின்
வருத்தம்.
"இயக்குனர்
சொல்றத அப்படியே ஒப்பிக்கிறாங்க.எந்த வசனமும் சினிமாவுக்காக
எழுதப்படுறது தான்.அத நிஜமா
நெனச்சு அவங்கள தூக்கி வெச்சு
கொண்டாடுறாங்க"
"அறிவு
விரிவடையும்போது இது சரியாயிடும்யா.விடுங்க."
"என்னமோ.என் கணக்குபடி அடுத்தது
கம்ப்யூட்டர் யுகம் தான்.அப்போ
இந்த சினிமா பைத்தியம் ஓரளவாச்சும்
மாறிடும்."
நம்பிக்கையுடன்
சொன்னார் வாத்தியார்.
20.4.2012…………….
"அப்படி
என்னடா பாக்குற நாள் பூராவும்?"
கணினியுடன்
ஒன்றிப்போயிருந்த தன் பெயரனைக் கேட்டார்
வாத்தி.
"நீ
70yrs
old man தாத்தா.உனக்கு இதெல்லாம் புரியாது."
"சொல்லுடா
புரிஞ்சுக்குறேன்"
"facebook. சொன்ன உடனே
புரிஞ்சுடுச்சா?"
"இத
பத்தி பத்திரிக்கைல படிச்சிருக்கேன்.நல்ல முயற்சி.ஆனா
நாள் முழுக்க இருக்குற அளவுக்கு
என்ன இருக்கு இதுல?"
"புடிச்ச
விஷயத்த share,like
பண்ணுவோம்."
"உருப்படியா
என்ன பண்ணுவீங்க?"
"recent happenings பத்தி discuss பண்ணுவோம்."
"எந்த
மாதிரி?"
"இந்த
மாதிரி" என்று அவன் வாய் சொல்லாமல் விழுங்கியதை
விரல் சுட்டிக்காட்டியது.
கண்ணாடி
சரிசெய்து கணினித்திரை நோக்கினார் வாத்தி.
"இந்த
match
தோத்ததுக்குக் காரணம் தோனியா சச்சினா?"
"எங்க
xxxx
அண்ணா படம் வசூல் 70 கோடி.
உங்க yyyy
வசூல் 65கோடி தான்.போங்கடா
(தணிக்கை செய்யப்பட்ட கெட்ட வார்த்தை)"
"அந்த
படம் செம மொக்க.songs வெச்சு
ஏமாத்துறாங்க"
என்று பல உருப்படியான(!)
விவாதங்கள்.
மேலும் அதில் groups என்பதன் கீழே இருந்த பெயர்களில் சில:
xxxx ஒழிப்பவர்
ஒழிக்கும் சங்கம்.
yyyy ஒழிக்கும்
சங்கம்.
xxxx
வெறியர்கள்.
"எத்தன
வருஷம் ஆகட்டும்.தொழில்நுட்பம் எவ்ளோ முன்னேறுனாலும்,எவ்ளோ
படிச்சாலும் இவங்க திருந்த மாட்டாங்க.."
மனதில்
எண்ணிக் கொண்டே,
"சாப்புட
வாடா." பெயரனை அழைத்தார்.
"ஒரு
பத்து நிமிஷம் தாத்தா.எங்க
தலைவர் படத்த பத்தி ஒருத்தன்
தப்பா பேசிட்டான்.அவன நல்ல கிழிச்சிட்டு
வரேன்."
ஒரு திறமைசாலியை இரசிப்பது நன்று.
ஆனால் அவர் மேல் வெறிகொண்டு,மற்றவரை வெறுப்பதும் இழிப்பதும் தவறு.
இரசனைக்கும்
வெறிக்கும் உள்ள வேறுபாடை இளைஞர்கள்
உணரும் வரை,
இந்தப்
போதை தெளியாது.
...................................கந்தசுவாமி.........................
No comments:
Post a Comment