Sunday, November 13, 2011

விடுப்பவன் எவன்?


ற்களும் கடல்களும்,
புற்களும் பூகம்பமும்,
புதிர்தான் எல்லாம்,
புவியின் மேலே.
அவிழ்ப்பவன் மனிதன்.
விடுப்பவன் எவன்?
சலிக்காமல் முளைக்கும்,
சந்திரனும் சூரியனும்,
ஆக்கவும் தாக்கவும்,
நீரும் நெருப்பும்,
நுரையீரல் நுழைந்து,
உயிர்தரும் காற்றும்,
சரிவிகிதக் கலப்பில்,
சரியும் தவறும்,
விரிவாக ஆராய்ந்து,
விடைவினான் மனிதன்.
விடுத்தவன் எவன்?
அணுவும் அதன்பிரிவும்,
அகிலத்தின் அளவும்,
முகிலுள்ளே இசையும்,
முழுவுடல் தசையும்,
விண்வெளி கோளும்,
மின்னொளி கோபுரம்,
வியாதிகள் விரட்டும்,
வியத்தகு மருந்தும்,
விரிவாக ஆராய்ந்து,
விடைவினான் மனிதன்.
விடுத்தவன் எவன்?
வேறுபடும் கருத்தால்,
மாறுபடும் அறுதியிடல்,
அளிக்கிறது உலகம்.
இறைவனென ஆத்திகன்,
இயற்கையென நாத்திகன்.
.....கந்தசுவாமி.....

4 comments:

  1. நல்ல சிந்தனை! கவிதையை கவிதை நடையில் எழுதியதற்கு பாராட்டுகள்! புதுக்கவிதை என்று பலர் கவிதையின் தரத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்(என்னையும் சேர்த்து தான்! :))!

    //விடைவினான்// இப்படி ஒரு சொல் இருக்கா?!

    ReplyDelete
  2. ஓரு சிறுகதை ஒன்றில் வாசித்த சொல் அது...
    தமிழ் ஆசிரியரான என் உறவினரும் ஆமோதித்தார்...
    பிடித்துப் போக‌வே ப‌ய‌ன்ப‌டுத்தினேன்:)
    உங்க‌ள் க‌ருத்துக்கு ந‌ன்றி.
    தொட‌ர்ந்து தொட‌ர்பில் இருக்க‌ விழைகிறேன்:)

    ReplyDelete
  3. மிக அருமை கந்தசாமி

    ReplyDelete