Monday, September 19, 2011

தனிமையில் வாடும் தலைவன்.

இலையுதிர் காலம்.
இளவெயில் நேரம்.
இருவிழி ஓரம்,
சிறுதுளி ஊரும்.

பழகிய காலம்.
அழகிய காலம்.
நினைவுகள் தீண்டும்.
மறுபடி வேண்டும்.



சிரித்து சிரித்து சிறகுகள் விரித்தோம்.
விரித்து விரித்து வெற்றிகள் பறித்தோம்.
கிண்டலும் கேலியும்,
கிண்டிடும் ஞாபகம்.
எண்ணங்கள் யாவையும்,
நண்பனின் பூமுகம்.

கண்களில் அதிகம் பேசிக் கொண்டோம்.
கனவினில் கரங்கள் கோர்த்துக் கொண்டோம்.
எனக்கென இருக்கிறாய்,
மனதினில் வசிக்கிறாய்.
திரைகளும் திறந்திடும்,
விரைவினில் விடிந்திடும்.
.......கந்தசுவாமி..........

2 comments:

  1. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! அருமையான கவிதை!

    ReplyDelete
  2. நன்றி:) நீங்கள் அறிந்த தமிழ் ஆர்வலர்களுக்கு என் வலைதளத்தைப் பார்வையிட பரிசீலித்தால், அது என் படைப்புகளின் தரத்தை உயர்த்தும் என்று நம்புகிறேன்.
    என் தமிழ்ப் பயணத்தில் தமிழ் இரசிக்கும் தமிழர்களைவிடச் சிறந்த‌ வழி விளக்காக விளங்க யாவரும் இலர்:)

    ReplyDelete