பாரம் சுமந்து வந்தேன்.
பேரம் பேசினர் என்னிடம்.
பத்துக்கு
நான் ஒத்துப் போனேன்.
எட்டென்று
அவர் எட்டிப் போனார்.
முதல் போனி எண்ணி,
ஒன்பதானது
என் பதில்.
முதலாளி
அவர் எண்ணம்,
மறுக்கவேண்டும்
என்பதில்.
தட்டில்
சோறு வேண்டும்.
துட்டுக்கு
வேறு வழியில்லை.
விட்டுக்கொடுத்துப்
போனேன்.
இட்டுப்போனார்
அவர்.
உடற்சசேதமில்லா
பிச்சைக்காரனுக்கு ஒன்றும்,
உண்டியலுடைய
சர்ச்சைக்காரனுக்கு ஒன்றும்.
..........கந்தசுவாமி..........
witty!!
ReplyDelete